தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து : ஒருவர் பலி
கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடவத்தை நோக்கி நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த கார் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.