இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டார்களா?

இந்திய செய்தித்தளம் ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதத்தில் ‘இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்’ என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என அத்தளம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தை இலங்கைக்கு எடுத்துக்கூறி தாக்குதல்களை நிறுத்துமாறு அவர் அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் 6 இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்தே இந்த கடிதத்தை அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ளார்.

அத்தோடு கடந்த பெப்ரவரி 15 அன்று தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள்,  பெப்ரவரி 21ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று 23ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினரால்  தாக்கப்பட்டதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கடற்படையினர் தரப்பில் இருந்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.