இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பீதியில் உறைந்த மக்கள்

சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

அடுத்தடுத்து சில இடங்களில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் வடக்குப் பகுதியான ஹால்மஹோராவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுமார் நள்ளிரவு 1.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

சுனாமி அபாயம் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.