கோப் குழுவிற்கு புதிய தலைவர் தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகவும் அவர் கோப் குழுவின் தலைவராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் நடந்த கோப் குழுவின் கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.