போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கு புனர்வாழ்வு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நால்வர் ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.இதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் படி குறித்த நால்வரையும் ஆறு மாத காலத்திற்கு புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.