
பெரிய பூகம்பங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் : இந்தியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹிமாச்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பூமி தகடுகளின் பிளவு காரணமாக இந்தியாவின் ஹிமாச்சல – உத்தரகண்ட மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பூர்ணசந்திர ராதி இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்கிறது, இதன் விளைவாக இமயமலையில் அழுத்தம் குவிந்து பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
