துப்பாக்கி திருடப்பட்ட வழக்கில் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது

இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இலங்கை விமானப்படை தளத்தில் இருந்து T-56 ஆயுதம் மற்றும் நான்கு மகசீன்களில் இருந்த 120 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதம் மற்றும் தோட்டாக்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், பாணந்துறை அங்குருவதொட்ட பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரத்மலானை முகாமில் உள்ள விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து T-56 ஆயுதம் மற்றும் நான்கு மெகசின்களில் இருந்த 120 தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.