ஐவர் உலர் கஞ்சாவுடன் கைது

ஐவர் உலர்ந்த கஞ்சாவுடன் கும்புக்கன் ஓய – யால வனப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 122 கிலோ 200 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்