இன்றைய ராசிபலன்
மேஷம்:
அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய கடன்களை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்:
எதார்த்தமாக பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை கொடுத்து தீர்ப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
மிதுனம்:
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கடகம்:
கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுங்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.