வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி : 22 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது .

இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 19 பெண்களும், 3 ஆண்களும் அடங்குகின்றனர் .

அவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .

தடுப்பு தொகுதி செயற்படாமல் போனமையினால் குறித்த லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.