முன்னாள் ஜனாதிபதியின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலினால் பாதிகப்பட்டுள்ளவர்கள் இழப்பீடு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கின் தீர்ப்பானது, மேல் மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரையில் குறித்த வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்படவிருந்தது.

தாக்குதலை தடுப்பதற்கு போதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்காமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 108 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.