இந்தியாவில் நில அதிர்வா?

இந்தியாவில் – சென்னையில் இன்று புதன்கிழமை காலை குறைந்தளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

ஒயிட்ஸ் சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் சில கட்டிடங்களில் குறைந்தளவிலான அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் பீதியடைந்ததாகவும் தகவல்கள் பரவின.

மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டது என்ற தகவல் தவறானது என்றும், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில் அவர் கூறுகையில், “சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளது. 

இதுவரை அத்தகைய தகவல்கள்  எதுவும்  அந்த மையத்தில் இருந்து கிடைக்கப்பெறவில்லை” என தெரிவித்தார் எனவும் இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது.