பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்

கடந்தாண்டு எலான் மஸ்க் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பல மாற்றங்களை கொண்டுவந்தார்.

இதில், முக்கிய மாற்றமாக டிவிட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக் கணக்குகளை) வைத்திருப்பவர்கள்  அவர்கள் மாதம் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

டிவிட்டர் புளூவை பயன்படுத்துவதற்கு மாதாந்தம் சந்தாவாக , கைத்தொலைபேசிகளில் பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.900, இணைய வழியில்பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.650  செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய வசதி இணையம், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு என 3 தளங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் இந்த சேவைகளை ஆண்டு சந்தாவாக ரூ.6,800 செலுத்தியும் பெற முடியும் என்றும் டிவிட்டர் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின்  தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூடிக் பெற இணையத்துக்கு மாதத்திற்கு 11.99 டொலரும்  ஐ.ஓ.எஸ் இயங்குதளத்துக்கும் 14.99 டாலரும் சந்தா நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக இந்த திட்டம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மற்றய  நாடுகளிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என மார்க் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.