மின்கட்டண உயர்வு போன்றவற்றால் வெங்காய செய்கை விவசாயிகள் பாதிப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, தாமரைக் குளம், வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப் பதிலாக வேறுபயிர்கள் செய்வதாகவும் அதில் லாபம் இல்லை எனவும் இதனால் வாழ்வாதார பிரச்சனையை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
வெங்காயச் செய்கைக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் செய்கின்றோம், யாழ்ப்பாணத்தில் விதை வெங்காயம் எடுக்க முடியாது, போக்குவரத்து செலவு அதிகம், யூரியா இல்லை எண்ணெய் பசளை விலை, கூலியாக்களுக்கான கூலி அதிகம், டீசல் இல்லை உழவு இயந்திர உழவுக் கூலி அதிகம், பயிர்களுக்கு நீர்பாய்ப்பது மின்சாரத்தின் மூலம் தான் மின்சார கட்டணம் அதிகம்.
முதலான காரணங்களினால் வெங்காயச் செய்கைக்குப் பதிலாக ஏனைய வெண்டி, மிளகாய், கறி மிளகாய், மரவள்ளி, கத்தரி, பூசணிக்காய் முதலான பயிர்களை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர் .
இது தமது வாழ்வாதார தொழில், இதை நம்பியே தமது குடும்பங்கள் வாழ்கிறது எனவும் தெரிவிக்கின்றார்கள் .
எனவே இது சம்பந்தமான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவிக்கின்றனர்.