வடமாகாண அரச பேரூந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டமை, மற்றும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்தியபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த வருடம் டிசம்பர் 31 வரை பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவரின் இடத்திற்கு எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை ஆகியவற்றை கண்டித்து இன்று வடமாகாண அரச பேரூந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் மீள பேருந்து சேவைகள் மதியம் முதல் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஐக்கிய மக்கள் தொழிற்சங்க தலைவர் ஜோ.விஜிந்தன் உட்பட ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முடியும் வரை தற்காலிகமாக தற்போது நியமிக்கப்பட்டவர் காசோலைக்கான கையொப்பம் வைப்பதற்கும் சில கடமைகளுக்கும் இவர் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போது எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வடக்கில் தகுதிவாய்ந்தவர்கள் இருக்கையில் இவர்களை விட்டு கிழக்கில் இருந்தும் தென்பகுதியில் இருந்தும் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நிலையில் இன்றைய சந்திப்பில் வடபிராந்திய ஊழியர்கள் தகுதிவாய்ந்த 4 பேரை முன்மொழிந்ததுடன் தற்போது வடபிராந்திய நிதி முகாமையாளர் அழகேசன் என்பவரை தற்காலிகமாக பொது முகாமையாளராளராக நியமிக்க போக்குவரத்து அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க