விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது

தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த விசா மையத்தின் முக்கிய உள்ளூர் பிரதிநிதி ஒருவர் தனது கடமைகளுக்கு பயன்படுத்திய மடிக்கணினி உட்பட பல சொத்துக்கள் திருடுபோயுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வளாகத்தில் இருந்து மடிக்கணினி, டேப் இயந்திரம் மற்றும் டி.வி.ஆர் இயந்திரம் என்பன காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் விசா மையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும்இ சந்தேக நபர்களில் அவரது கணவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் திகதி காலை முச்சக்கர வண்டியில் வந்த மூவர் இந்தத் திருட்டைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிருலப்பனை மற்றும் வெள்ளவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.