தாதியர் கல்லூரி மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த இருவர் கைது

இந்தியாவில் – கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர்,  கோழிக்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் தாதியர் கற்கைநெறியில் கல்வி கற்று வருகின்றார். படிக்கும்போது கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.அத்தோடு இளைஞரின் நண்பரும் மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார்,  இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

கடந்த 18ம் திகதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு இளைஞர் அழைத்தார். வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் வந்து விடலாம் என்கிற எண்ணத்தில் மாணவியும் அதற்கு சம்மதித்துள்ளார்.

அதன்படி அன்று மாலை மாணவி இளைஞர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.அதே வேளை அவரது நண்பரும் அங்கு இருந்துள்ளார். மூவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.சிறிது நேரத்தின் பின்னர் மது அருந்தத் தொடங்கியுள்ளனர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பர்கள் வற்புறுத்தலால் சிறிது மது குடித்துள்ளார்.

மதுவின் மயக்கத்தினால் மாணவி மயங்கி விழுந்துள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச் சம்பவத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் மறுநாள் காலையில் விட்டுவிட்டு இளைஞர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறியுள்ளார். அதோடு கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதால் காணப்பட்டத்தால் கல்லூரி ஆசிரியைகள் மாணவியை அழைத்து விசாரித்தபோது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்கள்  இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொலிஸார் வழக்கு பதிவு செய்து,  இளைஞர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து அவர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.

தற்பொழுது அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட இருவரும் இதுபோல் வேறு நபர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.