மதுபோதையில் இளைஞர் ஒருவர் பெண்ணொருவரை மோதி தள்ளிவிட்டு தப்பியோட்டம்
-யாழ் நிருபர்-
மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், இளம் பெண்ணின் மீது மோதிவிட்டு தப்பித்து ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். நகரில் இருந்து காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர் ஒருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது கொட்டடியில் இருந்து அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றுக்கு துவிச்சக்கவண்டியில் வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் மீது குறித்த இளைஞர் மீது மோதினர்.
யாழ். கொட்டடியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு அருகாமையில் விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
அதில் சிறு காயத்துடன் குறித்த பெண் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
மோதியவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.