தொழிற்சங்கங்களால் இன்று முதல் கறுப்பு வாரம் அறிவிப்பு
பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளன.
இந்த கறுப்பு வாரமானது, கனியவளம், துறைமுகம், குடிநீர், மின்சாரம், வங்கித்துறை, மருத்துவம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களின் சங்கங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக , எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று செவ்வாய் கிழமை மதியம் 12 மணிக்கு முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.