இரண்டு நாய்க்குட்டிகளை கொன்ற பெண் அடையாளம் காணப்பட்டார்
அண்மையில் பிரதான வீதியொன்றில் காரை ஓட்டிச்சென்று இரண்டு நாய்க்குட்டிகளை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன, அதே நேரத்தில் விலங்கு அமைப்புகள் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடின.
வாகனத்தின் இலக்கத்தகட்டை அடையாளம் கண்ட விலங்குகள் அமைப்பினர், சம்பவம் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
விசாரணைகளின் மூலம் பொலிஸார் பெண் சாரதி ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து குறித்த பெண்ணிற்கு அபராதமாக 100,000. ரூபாவை நீதிமன்றம் விதித்தது
மேலும் குறித்த வழக்கு ஜூன் 1 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
