துருக்கி – சிரிய எல்லையில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – சிரிய எல்லையில் நேற்று திங்கட்கிழமை மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 680 துருக்கிய மற்றும் சிரிய பிரஜைகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கி-சிரிய எல்லையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி உலகையே உலுக்கிய இந்த நிலநடுக்கத்தில் 44,000 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 06ஆம் திகதிக்கு பின்னர் துருக்கி – சிரிய எல்லையில் சுமார் 6000 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.