
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலமுறை உதைத்த கடற்படை சிப்பாய்
வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக தெரிவிக்கப்படும் கடற்படை சிப்பாய் ஒருவரை கணேமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பஹா, கணேமுல்ல – அமுனுகொட பகுதியில் ஒள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த தாக்குதலால் அவரது கரு அழிந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரான கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.
இந்த கடற்படை சிப்பாய்க்கும் உறவினர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரான இராணுவ வீரர் குறித்த நபரை தாக்கியதுடன், நான்கு மாத கர்ப்பிணியான அவரது மனைவியின் வயிற்றிலும் பலமுறை உதைத்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள முகாமொன்றில் கடமையாற்றி வரும் கடற்படைச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், கனேமுல்ல பொலிஸ் நிலையப் பிரதான பரிசோதகர் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
