இ.போ.ச வடபிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டதால் பணிப்புறக்கணிப்பு

-யாழ் நிருபர்-

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டமை,  மற்றும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்தியபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த வருடம் டிசம்பர் 31 வரை பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவரின் இடத்திற்கு எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை ஆகியவற்றை கண்டித்து  இன்று வடமாகாண அரச பேரூந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர், ஆகிய சாலை முகாமையாளர்கள்  மற்றும் சாரதிகள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால்  பாடாலை மாணவர்கள், பயணிகள் ஆகியோர் பெரும் அசௌரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க