ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துக்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் செயற்பட்டால் ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மொழி மற்றும் கருத்து சுதந்திரம் காணப்படுகின்ற நிலையில், அவற்றுக்கு பொலிஸார் எந்தவித தடையும் ஏற்படுத்தப்போவதில்லை.

எனினும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டால் அதற்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.