T20 மகளிர் உலக கிண்ண போட்டி : இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி, 15.5 ஓவர்கள் நிறைவில், சகல விக்கட்களையும் இழந்து 60 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன்படி, குழு ஒன்றிக்கான புள்ளிப்பட்டியலில், 8 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய மகளிர் அணி முதல் இடத்திலும், தலா 4 புள்ளிகளை பெற்று நியுசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன
அதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி 102 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.