
நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்தவர் மரணம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் சிக்குண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களனி, கோணவல-தமுனுவெவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.திலகரத்ன (77வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சக நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது நேற்று மாலை நிலாவெளி கடற்கரையில் நீராட செல்வதற்காக சென்றபோது அலையில் சிக்குண்டு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதுடன் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
