ஜப்பான் தூதுவருடன் சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் உத்தியோக பூர்வ சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mlzukoshl hideaki  தலைமையிலான உயர் மட்ட குழுவினர் மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்குக்கிடையில் சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை மாலை Trinco Bluby ஹோட்டலில் இடம் பெற்றது.

இதன் போது சர்வமதக் குழு பற்றிய செயற்பாடுகள், திருகோணமலை மாவட்ட காணிப்பிரச்சனைகள், 13 ம் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், தகவல் அறியும் சட்டத்தை வலுப்படுத்தல் மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களின் பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.