வாகனத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

வாகனம் ஒன்றை பின்னால் நகர்த்த முற்பட்ட போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுபோவில ரூபன் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

வாகன சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது குழந்தையின் மாமா வாகனத்தை இயக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.