
காட்டு விலங்குகளை கொல்ல அனுமதி
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ” பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது விவசாயிகள் அமைச்சரிடம் நாட்டில் வன விலங்குகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதன் போது தங்களது பயிர்களை பாதுகாக்க அமைச்சர் உடனடி தீர்வு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் குறித்த கோரிக்கையை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டு விலங்குகள் குறித்து இறுதி அறிக்கை பெறப்பட்டது.
இக் குளுவின் அறிக்கையின்படி மயில், குரங்குகள், முள்ளம்பன்றிகள், ராட்சத அணில், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் அழிந்து வரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றைக் கொல்வதைத் தவிர வேறு எந்த மாற்றுத் தீர்வுகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
