இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் என்னுடைய ஆட்சிக்காலமே – மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலப்பகுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினத்துடன் ஒப்பிடுகையில் நான் அதிகமாக செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நான் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் வேலைப்பளு அதிகமானதால் நாடாளுமன்றில் சில சந்தர்ப்பங்களில் உணவு உட்கொண்டுள்ளேன்.

ஏனைய அனைத்து சந்தரப்பங்களிலும்  எனது மனைவி சமைத்த உணவையே உட்கொண்டுள்ளேன்.

இவ்வாறே நான் நாட்டு மக்களின் பணத்தை சேமித்தேன், நான் ஒருபோதும் வீண் செலவீனம் செய்யவில்லை என்பதற்கு இதுவே உதாரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.