நீராடச் சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை : தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்
மாத்தறை, வெல்லமடம கடற்பரப்பில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படையின் உதவி பெறப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.