அதிக புகையை வெளியிடும் வாகனத்தை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை

வாகனங்கள் அதிகளவில் புகையை வெளியிடுவதை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தகைய வாகனங்களின் இலக்கத்தகட்டை புகைப்படம் எடுத்து,  இடம் மற்றும் நேரத்தை குறிப்பிட்டு வாட்ஸ்அப் (whatsapp) அல்லது வைபர் (viber) செய்தி மூலம் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 070 35 00 525 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அந்த அறிவித்தல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.