இலங்கையில் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு
ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியர் ஒருவரால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளரிடம் அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி கடந்த டிசம்பர் மாதம் தனது பெற்றோருடன் இலங்கைக்கு வந்து ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், டிசம்பர் 26ஆம் திகதி தனது தாயுடன் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் அவ்கள் அமெரிக்கா திரும்பிய போது மசாஜ் சென்டரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது மகள் கூறியதாகவும், அதன்படி புகார் அளிக்கப்படுவதாகவும் அவரது தந்தை மின்னஞ்சல் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.