கடுமையான விதிகள் தளர்வு : சீனாவில் 200 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிப்பு
கடுமையான கொரோனா சுகாதார வழிகாட்டுதல்கள் நீக்கப்பட்டதில் இருந்து, கடந்த நவம்பர் தொடக்கம் சீனாவில் இருந்து 200 மில்லியன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் சுமார் 800,000 பேர் கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் சிகிச்சையின் பின்னர் அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டில், வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை விதித்தது.
இதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த ஆண்டு வழிகாட்டுதல்களை அதிகாரிகள் தளர்த்தினர்.