
ஹோமாகம – பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுகின்றது
கடந்த வருடம் மூடப்பட்ட ஹோமாகம – பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எதிர்வரும் 27 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே கல்வி நடவடிக்கைகளுக்காக அழைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
ஏனைய வருடங்களின் மாணவர்களின் படிப்பையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.
ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, இருதரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 கல்வியாண்டு மாணவர்கள் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை தீர்மானித்துள்ளது.
அண்மையில் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்து முதலாம் ஆண்டு மாணவர்களை முடி வெட்டவில்லை என தெரிவித்து தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
