டொலருக்கு நிகராக ரூபாவின் மதிப்பு உயர்வு
பெப்ரவரி 10-ம் திகதி வரையிலான வாரத்தில், அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாயின் பெறுமதி அதிகமாக உள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, ரூபாயின் மதிப்பு டொலருக்கு எதிராக 0.3 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 0.1 சதவீதமும் உயர்ந்துள்ளது.
எனினும் ஜப்பானிய யென் மற்றும் யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாத இறுதிக்குள் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகை 2,120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்க அறிவித்துள்ளது.