முட்டை இறக்குமதிக்கு அனுமதி : கடைகளில் விற்க அனுமதி இல்லை
முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னதாக முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்ட போது, பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் காரணமாக இறக்குமதியை அனுமதிக்க முடியாது என்ற கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்ப்பால் இறக்குமதி திட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
