இன்றைய ராசிபலன்கள்

மேஷம் 

இன்று உங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் அனைத்து திட்டங்களையும் சிறந்த வகையில் தீர்மானிப்பீர்கள். இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். எனினும் சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.

 

ரிஷபம் 

நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடமிருந்து நெருக்குதல் இருக்கலாம். அவர் பணியை வேறுவிதமாக செய்யும்படி உத்தரவிடலாம். எந்த  முடிவையும் மேற்கொள்வதற்கு முன்னால் நன்றாக சிந்தித்து செயல்படவும்.

மிதுனம்

இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான திருப்திகரமான நாளாக இருக்கும். உங்களது தினசரி பணிகளுடன் கூடவே, வீட்டு பணிகளிலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். திருமணம், கூட்டாளித்துவம் போன்ற விஷயங்களில் உங்களுக்கு இரட்டை மனநிலை இருக்கும். ஏதேனும் விற்க வேண்டும் என்றால் அதற்கு இன்று உகந்த நாளாக இருக்கும்.

கடகம் 

இன்று நீங்கள் பல வகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வீர்கள். அவற்றை உற்சாகத்துடனும் மேற்கொள்வீர்கள். அதனால் பணிகள் எளிதாக நிறைவேறும். மிகவும் கடினமான பணிகளை கூட குருகிய நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள்.

சிம்மம் 

இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். அலுவலகத்தில், பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைக்குமா என்ற கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால் அதற்கான பலன்கள் நீங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருக்கும்.

 

கன்னி

நீங்கள்இ இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி, செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாக திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம் 

நீங்கள் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாகசெய்து முடிப்பீர்கள். இன்றைய தினம் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும்இ அதை நீங்கள் உங்கள் செயல்திறனுடன் வெற்றிகரமாக செய்ய முடியும் மற்றும் உங்கள் திறமை பாராட்டத்தக்கதாக இருக்கும்.

விருச்சிகம்

அனுபவம் மூலம் பாடங்களை கற்க மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்கவும். அவர்கள் ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்குவார்கள். நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்களில் விலகி இருக்கவும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.

தனுசு

இன்று மிகவும் குழப்பம் மிகுந்த நாளாக, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக என்ன செய்வது என்று திட்டமிடப்படாத நாளாக இருக்கும். அமைதி இருக்காது. அதற்காக கவலை கொள்ள தேவையில்லை. குழப்பங்களை தீர்க்க மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

மகரம்

இன்று, தேவையற்ற செலவின் காரணமாக பணவிரயம் ஏற்படலாம். ஆனால், இன்று நிதி நிலைமை மேம்படும் என்பதால் மகிழ்ச்சி கொள்ளவும். பணவரவு ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. மற்றபடி மற்ற நாட்களைப் போலவே இன்றும் சாதாரணமான நாளாக இருக்கும்.

கும்பம்

இன்றைய நாள் உங்களுக்கு உத்தமான நாளாக அமைகிறது. வியாபாரத்தில் உள்ளவர்கள் இலாபத்தை அடையலாம். நண்பர்களின் நெருக்கம் உங்களின் சந்தோஷம் மற்றும் உற்சாகத்திற்கு காரணம் ஆகலாம். நண்பர்களுடன் ஒரு சிறிய சுற்றுலாவிற்கு செல்லலாம். பிரம்மச்சாரிகளுக்கு தனக்கு ஏற்ற ஜோடி கிடைக்கலாம்.

மீனம்

இன்றைய நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமைகிறது. உங்கள் முயற்சி வெற்றியை அளிக்கும். உயர் அதிகாரிகளிடமிருந்து மிகவும் பாராட்டபடுவீர்கள் . இன்று உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் எந்த வியாபாரத்தில் இருந்தாலும் இலாபம் கிடைக்கும். குடும்பத்தின் சூழ்நிலை சந்தோஷமாக இருக்கும்.