கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்கள் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 சந்தேகத்துக்குரியவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிலியந்தலை, கல்கிசை, மொரட்டுவை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்