பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு
கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மைதானத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், முகத்தில் பல காயங்கள் காணப்பட்டதாக விசாரணை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குமார சம்பத் ( 29 வயது) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை நடந்த விதம் மற்றும் கொலையை செய்த நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.