பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி கடிதம்

பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுதந்திர மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்கு திறைசேரி பணம் வழங்காமை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக சுதந்திர மக்கள் முன்னணி  அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.