எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை

எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி , ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

அத்துடன்  வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது,  இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையினால் 45 வீதமான பாட புத்தகங்கள் அரச அச்சகத்திலும், 55 வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது, என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.