பறவைக் காய்ச்சல் காரணமாக 585 கடல் சிங்கங்கள் உயிரிழப்பு

தென்அமெரிக்க நாடான பெருவில் பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் 55,000 பறவைகள் உயிரிழந்திருப்பதை வனப் பாதுகாவலர்கள் கண்டறிந்தனர். இதில், 7 கடலோரப் பிராந்தியங்களில் உள்ள 585 கடல் சிங்கங்களும் அடங்கும் என்று சர்வதேச செய்திகளில் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், நாரைகள், பென்குவின்களும் உயிரிழந்துள்ளன. கடல் சிங்கங்களின் மாதிரிகளை ஆய்வுசெய்ததில் பறவைக்காய்ச்சல் காரணமாக அவை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. எனவே, கடற்கரைகளில் கடல் சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகளை நெருங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தேசிய வனவிலங்கு சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, பறவைக் காய்ச்சல் காரணமாக, கோழிப்பண்ணையில் 37 ஆயிரம் பறவைகளை அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் அழித்தது குறிப்பிடத்தக்கது.