மக்கள் குடியிருப்பினுள் நுளைந்த பாம்பு

இந்தியா – கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் கோதகெரே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நுளைந்த பாம்பு, குளிர்சாதனப்பெட்டியின் அருகே மறைந்துவிட்டது.

இதனை கண்டு அச்சமடைந்த அவர்கள், பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பாம்புபிடி வீரர் குளிர்சாதனப்பெட்டியின் பின்னால் இருந்த பாம்பை அவதானமாக மீட்டார். தொடர்ந்து வனத்துறையினரின் உதவியுடன் பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

மழை காலங்களில் பாம்பு அடிக்கடி மக்கள் குடியிருப்புக்களில் நுளைவதால் , பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்