அரைக்கும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பலியான இளம்பெண்
இந்தியா – கேரளாவில் அரைக்கும் இயந்திரத்தில் மா அரைத்து கொண்டிருந்த போது துப்பட்டா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு தலப்பாடி பகுதியை சேர்ந்த ஜெயஷீலா வீட்டின் அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்தும் வந்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இவர் வழக்கம் போல் பேக்கரியில் உள்ள அரைக்கும் இயந்திரம் ஒன்றில் மா அரைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த துப்பட்டா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, சக ஊழியர்கள்அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த நாள் அன்றே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.