தலைக்கவசத்தால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை
வீதியில் பயணித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
வெலிப்பன்ன, கல்மட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான ரங்கவிராஜ் ( 34 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிப்பன்ன கல்மட்ட பிரதேசத்தில் வீதியொன்றில் பயணித்த 16 வயதுடைய இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதம் வலுத்த நிலையில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சந்தேகநபர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.