
பிளாஸ்டிக்கில் இருந்து உலகிற்கு விடுதலை
உலகம் முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகையை விட அதிகமாக குவிகிறது பிளாஸ்டிக் குப்பைகள். இப்போது பூமிக்குள் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மக்கி சிதையவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்.
ஆதலால் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கை முற்றாக அழிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களது கடின உழைப்பிற்கு பின்பு பிளாஸ்டிக் உண்ணும் என்சைமாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது . கடந்த சில ஆண்டுகளாக பீ.ஈ.டி போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளை அழிக்கும் என்சைமாக்களை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இருப்பினும், இதன் வேகம் குறைவு தான். அதனால் தான் அதிவேக புதிய வகை என்சைமா ஒன்றை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூ அட்லஸால் அறிவிக்கப்பட்ட புதிய என்சைமா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முதலில் அறிமுகமானது.
இது பீ.ஈ.டி பாக்டீரியாவை பிளாஸ்டிக்களை உணவாக உண்டு சில வாரங்களில் பிளாஸ்டிக்கை சிதைத்து அழித்துவிடுகிறது. பின்னர் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால் எம்.எச்.ஈ.டி.ஏ.எஸ்.ஈ என அழைக்கப்படும் மற்றொரு மேம்படுத்தப்பட்ட என்சைமாக்கள் உருவாக்கப்பட்டுப் பெயர் மாற்றப்பட்டது. தற்போது பிளாஸ்டிக்கை ஆறு மடங்கு வேகமாக உண்ணும் திறன் கொண்ட என்சைமா நுண்ணுயிரியை உருவாக்கியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இத்துடன், இந்த ஆராய்ச்சி நின்றுவிடவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் இதை விட இன்னும் வேகமாக பிளாஸ்டிக்கை அழிக்கும் என்சைம்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
