துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி : ஐந்து பேர் படுகாயம்
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு 43 வயதான துப்பாக்கிதாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்.
இதனையடுத்து, பல்கலைக்கழகத்தின் கிழக்கு லான்சிங் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 48 மணிநேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.