குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் மக்கள்
இந்தியாவில் – உதகை அருகே அமைந்துள்ள கோடப்ப மந்து 5 -ஆம் வட்டாரம்எண்ணிற்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நகரின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வீதியில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடந்த 40 ஆண்டு காலங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
உதகமண்டலம் நகராட்சி மூலம் வழங்கக்கூடிய குடிநீரானது தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எளிதாக குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.
ஆனால், உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்காததால் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை ஊற்றுகளின் மூலம் தொட்டிகள் அமைக்கப்பட்டு இரவு முழுவதும் காத்திருந்து குடிநீர் சேகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் செல்லும்போது வனவிலங்குகள் மூலம் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நவீன காலத்தில் இன்னும் ஒரு சொட்டு குடிநீருக்காக காட்டிற்குள் சென்று காத்திருந்து தண்ணீர் எடுத்து வரும் கிராம மக்களின் கதையை கேட்டால் கண்ணீர வரத்தான் செய்கிறது.
இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.