காரில் திடீரென பற்றி கொண்ட தீ

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர், அப்போது தலப்புழ எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது.

இதனைக்கண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தி பயணிகளுடன் வெளியேறிவிட்டார்.

நொடிக்கூட தாமதிக்காமல் அந்த தீயானது கார் முழுவதும் பரவியது, இதனை கண்டு அச்சமடைந்த கார் ஓட்டுநர் அங்கு இருந்த டேங்கர் லாரியில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் கார் முழுவதையும் ஆக்கிரமித்த தீ அதுவாகவே வேகத்தை குறைத்து கொண்டு அணைந்தது.

இதில் கார் முழுவதும் முழுமையாக கருகி காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் சுதாரித்து கொண்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.